உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆசிய போட்டியில் சாதனை மாணவிக்கு முதல்வர் வாழ்த்து

ஆசிய போட்டியில் சாதனை மாணவிக்கு முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி: ஆசிய பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற காரைக்கால் மாணவி, முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார். காரைக்கால், அக்கம்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த ரமேஷ் -கீதாமணி தம்பதியின் மகள் ஜனனிகா. தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் இவர், தென்னிந்திய மற்றும் தேசிய அளவிலான இறகுப் பந்துப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். அண்மையில் சீனாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட ஆசிய அளவிலான பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடிய மாணவி ஜனனிகா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தாயகம் திரும்பிய மாணவி ஜனனிகா, நேற்று சட்டசபையில், முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். அப்போது, முதல்வர், மேலும் பல பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்க்குமாறு வாழ்த்தினார். அப்போது சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி