மேலும் செய்திகள்
இந்திய வீரர்கள் பயிற்சி: முதல் டெஸ்ட் போட்டிக்கு
08-Jun-2025
புதுச்சேரி: இந்தியப் பண்பாடு மற்றும் தமிழ்மொழி குறித்து லண்டன் நாடாளுமன்றத்தில் நடக்கும் விழாவில் உரையாற்றும் தமிழறிஞர் சுந்தரமுருகனுக்கு, முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.லண்டன், குரோய்டான் தமிழ்ச் சங்கம், சென்னை, மோகனரங்கன் தமிழ் ஆராய்ச்சி மையம் சார்பில் உலகத்தின் சிறந்த தமிழ் அறிஞர்கள், 100 பேரை கவுரவிக்கும் தமிழ்ப் பண்பாட்டு விழா வரும் 18ம் தேதி இங்கிலாந்து நாட்டின் லண்டன் நாடாளுமன்றத்தில் நடக்கிறது. விழாவில், உலகில் உள்ள 25 நாடுகளின் தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். இதில், அந்தந்த நாடுகளை சேர்ந்த தமிழ் அறிஞர்கள், தங்களுடைய நாட்டின் பண்பாடு மற்றும் தமிழ் மொழி குறித்து 'வாய்ஸ் ஆப் த நேஷன்ஸ்' எனும் தலைப்பில் உரையாற்றுகின்றனர்.விழாவில், புதுச்சேரியை சேர்ந்த கலைமாமணி முனைவர் சுந்தரமுருகன் கலந்து கொண்டு, இந்தியப் பண்பாடு, தமிழ் மொழி குறித்து உரையாற்ற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி, முனைவர் சுந்தரமுருகனுக்கு வாழ்த்து தெரிவித்து, லண்டன் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலை, அரசு சார்பில் ஒலிக்க வைப்பதற்கு, அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என, தெரிவித்தார்.
08-Jun-2025