உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கிருத்திகை நாளில் முதல்வர் மனு தாக்கல்

 கிருத்திகை நாளில் முதல்வர் மனு தாக்கல்

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி வரும் திங்கட்கிழமை கிருத்திகை தினத்தில் மனு தாக்கல் செய்கிறார். புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த திங்கட்கிழமை 16ம் தேதி துவங்கி, வரும் 23ம் தேதி வரை நடக்கிறது. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வதற்காக புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளுக்கு 12 இடங்களிலும், காரைக்காலில் உள்ள 5 தொகுதிகளுக்கு 3 இடங்களிலும், மாகே, ஏனாம் தலா 1 என மொத்தம் 17 அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர்கள் துவங்கி அரசியல் கட்சி வேட்பாளர்கள் வரை நல்ல நாளில் மனு தாக்கல் செய்வதற்கு காத்திருக்கின்றனர். இதில், முதல்வர் ரங்கசாமி வரும் 23ம் தேதி கிருத்திகை தினத்தில் காலை 10:00 மணியில்,10:05 க்குள், அல்லது 12:15 மணியில் இருந்து 12:20க்குள் மனுதாக்கல் செய்யவுள்ளார். முதல்வர் எத்தனை தொகுதி, எந்த தொகுதியில் நிற்கப் போகிறார் என்ற தகவல் படு ரகசியமாக இருக்கிறது. இந்நிலையில், அஸ்வினி நட்சத்திரம், மேஷம் ராசியான முதல்வர் ரங்கசாமிக்கு தற்போது ஏழரைச்சனி நடந்து வருகிறது. இவரது ராசியில் 5ல் குரு, 6ல் ராகு, 9ல் சுக்கிரன், 10ல் சூரியன், 11ல் குரு பார்த்த புதன் சனி உள்ளார். 12ல் கேதுவும் உள்ளார். இவருக்கு அனைத்து லக்னங்களும் சரியாக உள்ளது. 10ல் சூரியன் உள்ளதால் அரசியல் தலைவருக்கான பதவிகள் தடையில்லாமல் கிடைக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ