உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வாய்க்கால் அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு

 வாய்க்கால் அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு

புதுச்சேரி: வழுதாவூர் சாலையில் பொதுப்பணித்துறை மூலம் கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணியினை முதல்வர் ரங்கசாமி பூஜை செய்து துவக்கி வைத்தார். புதுச்சேரி ராஜிவ் சந்திப்பு முதல் மேட்டுப்பாளையம் சந்திப்பு வரை வழுதாவூர் சாலையின் இருபுறமும் பொதுப்பணித் துறை மூலம் ரூ.11.46 கோடி மதிப்பில் புதிய கான்கிரீட் 'யூ' மற்றும் 'ட' வடிவ வாய்க்கால் அமைக்கும் பணிக்கான துவக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். இதில், அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., அரசு செயலர் முத்தம்மா, தலைமை பொறியாளர் வீரசெல்வம் , செயற்பொறியாளர் சீனு வாசன், உதவி பொறியாளர் பாலாஜி, இளநிலை பொறியாளர் செந்தமிழ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை