உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வீடு ஒதுக்கீடு ஆணை முதல்வர் வழங்கல்

 வீடு ஒதுக்கீடு ஆணை முதல்வர் வழங்கல்

புதுச்சேரி: சாலையோரங்களில் வசித்த குடும்பங்களுக்கு புதிய குடியிருப்பு ஒதுக்கீட்டிற்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரி, உருளையன்பேட்டை, ராஜ்பவன், உப்பளம், உழவர்கரை ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட சாலையோரம் மற்றும் நீர் நிலையோரங்களில் வசித்த 128 குடும்பங்களுக்கு, ரெட்டியார்பாளையம் லாம்பர்ட் சரவணன் நகரில், குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. புதிய குடியிருப்புகள் ஒதுக்கீட்டிற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி, பயனாளிகளுக்கு ஆணை வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர் லட்சுமி நாராயணன், நேரு எம்.எல்.ஏ., குடிசை மாற்று வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் சுனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி