உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / படகு இயக்குபவர்களுக்கு முதல்வர் உரிமம் வழங்கல்

படகு இயக்குபவர்களுக்கு முதல்வர் உரிமம் வழங்கல்

புதுச்சேரி; சவாரி செல்லும் படகுகளை இயக்குவதற்கான உரிமம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி மாநிலத்தில் வளர்ந்து வரும் நீர் சாகச விளையாட்டு, சுற்றுலா பயணிகளை அதிகமாக கவரும் பொழுது போக்கு அம்சமாக உள்ளது. இத்தொழிலை மேற்கொள்வதற்கு விருப்பமுள்ளபடகு இயக்குபவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெற்று, ஆய்வுக்குப் பின், உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது, 8 படகு சவாரி இயக்குபவர்களின் உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 21 புதிய நபர்களுக்கு படகு சவாரி உரிமம் வழங்கப்பட உள்ளது. 7 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. மேலும், அதிக எண்ணிக்கையிலான படகு சவாரி இயக்குபவர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருவதால், அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் வருவாய் ஏற்படுத்தும் வகையில், படகு சவாரி இயக்குதலை ஒழுங்குபடுத்துவதற்காக படகுகளுக்கு வண்ண அடையாளம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. படகு சவாரி இயக்குபவர்களுக்கு, உரிய வழிகாட்டுதல் அடிப்படையில், அரசின் ஒப்புதல் பெறப்பட்டு படகுகளை இயக்குவதற்கான உரிமம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி சட்டசபையில், படகு சவாரி இயக்குபவர்களுக்கு, உரிமம் வழங்கிடும் நிகழ்ச்சி நடந்தது.சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் முன்னிலையில், முதல்வர் ரங்கசாமி, உரிமங்களை வழங்கினார்.சபாநாயகர் செல்வம், அ.தி.மு.க., மாநில செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ