மேலும் செய்திகள்
நிரந்தர பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு
25-Feb-2025
புதுச்சேரி : புதுச்சேரியில் நிரந்தர ஜாதி சான்றிதழ் திட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். புதுச்சேரி சட்டசபையில், பட்ஜெட் உரை மீதான பொது விவாதத்தில் முதல்வர் ரங்கசாமி வருவாய்த்துறை அறிவிப்பு வெளியிட்டு பேசியதாவது; புதுச்சேரி மக்களுக்காக நிரந்தர ஜாதி சான்றிதழ் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட உள்ளது. நிர்வாக செயல்முறைகளை எளிதாக்கி, மக்களுக்கு விரைவான சேவை வழங்குவதை உறுதியாகக் கொண்டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மக்களுக்கு வாழ்நாள் முழுதும் செல்லுபடியாகும் நிரந்தர சாதி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த புதிய முறையில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே நிரந்தர ஜாதி சான்றிதழ் வழங்கப்படும். அந்த ஜாதி சான்றிதழ் அவரது வாழ்நாள் முழுவதும் செல்லபடியாகும். இதனால் அரசு அலுவலகங்களுக்கு மக்கள் மீண்டும், மீண்டும் செல்வது தவிர்க்கப்படும். பொதுமக்களின் சிரமங்கள் நீக்கப்படும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அவரவர் பள்ளிகளிலேயே நிரந்தர ஜாதி சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்களுக்கும், பெற்றோர்களும் அரசு அலுவலகங்களுக்கு தேவையின்றி செல்வதை தவிர்க்க முடியும். அரசு அலுவலகங்களில் கூட்ட நெரிசல் குறைந்து, சேவையின் திறன் மற்றும் செயல்திறன் அதிகரிக்கும் என்றார்.
25-Feb-2025