உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரசின் 2026ம் ஆண்டு காலண்டர் முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்

 அரசின் 2026ம் ஆண்டு காலண்டர் முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் 2026ம் ஆண்டிற்கான காலண்டரை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். புதுச்சேரி அரசு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் மூலம் 2026ம் ஆண்டுக்கான மாத காலண்டர் வெளியீட்டு விழா சட்டசபையில் முதல்வர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி, காலண்டரை வெளியிட்டார். நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், ஜெயக்குமார், அரசு கொறடா ஆறுமுகம், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். உலக சுற்றுலா தர வரிசையில் இரண்டாம் நகரமான புதுச்சேரியின் பழமை, புதுமைகளைப் போற்றும் வகையில், எழில்மிகு புதுச்சேரி நகரத்தின் பல்வேறு கால கட்டத்தின் அன்றை தோற்றமும், இன்றைய தோற்றமும் அழகிய வண்ணப்படத்துடன் நேர்த்தியாக இந்த காலண்டரில் உருவாக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ