உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெடிகுண்டு தேடிய போலீசாரை சாப்பிட சொன்ன முதல்வர் ரங்கசாமி

வெடிகுண்டு தேடிய போலீசாரை சாப்பிட சொன்ன முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி : புதுச்சேரியில் தினமும் ஏதாவது ஒரு பகுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதில், உச்சபட்சமாக ஏப்., 14ம் தேதி கவர்னர் மாளிகைக்கும், 19ம் தேதி முதல்வர் ரங்கசாமி வீடு, நட்சத்திர ஹோட்டல்களுக்கும் மிரட்டல் வந்தது. மிரட்டல் இ - மெயில் 'டார்க் நெட்' வழியே வந்துள்ளதால், மர்ம நபரை அடையாளம் காண முடியாமல் 'சைபர் கிரைம்' போலீசார் திணறுகின்றனர். மத்திய சைபர் கிரைம் உதவியை நாடியுள்ளனர்.இந்நிலையில், முதல்வர் வீட்டிற்கே வெடிகுண்டு மிரட்டலா என, அலறியடித்து எஸ்.பி., தலைமையில் குழுவாக சென்ற போலீசார், அங்கு சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த முதல்வரிடம், இ - மெயிலில் வந்த மிரட்டல் குறித்து போலீசார் தெரிவித்தனர். இதைக்கேட்டு, பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், 'ஓ... அப்படியா...? சரி எல்லாரும் சாப்பிட்டுட்டு போங்க...' என, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறினார். அதன்படியே, போலீசாரும் உணவருந்தி விட்டு வந்தனர்.இந்நிலையில், நேற்று காலை மீண்டும் முதல்வர் வீடு, ஜிப்மர் மருத்துவமனை, அப்பா பைத்தியசாமி கோவில், தலைமை செயலகம் அருகே உள்ள பிரெஞ்சு துாதரகம், புதுச்சேரி முல்லா வீதி குத்பா மசூதி ஆகிய இடங்களில், 'மதியம் 2:00 மணிக்கு ஆர்.டி.எக்ஸ்., வெடிகுண்டு வெடிக்கும்' என, மிரட்டல் விடுக்கப்பட்டது. வழக்கம் போல இதுவும் புரளிதான் என்பதால், போலீசார் நிம்மதியடைந்தனர். அதேநேரம் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ