மேலும் செய்திகள்
அண்ணா பிறந்த நாள் விழா
16-Sep-2025
புதுச்சேரி : திருபுவனை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா தனது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடினார். இதையொட்டி, திருவண்டார்கோவில் ஏழை முத்து மாரியம்மன் கோவிலில், சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பொது மக்களுக்கு அன்னதானம் வழங் கப்பட்டது. தொடர்ந்து, தனது வீட்டில் முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா, முதல்வர் ரங்கசாமி தலைமையில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், மு ன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, முன்னாள் எம்.எல்.ஏ., சுகுமாரன், என்.ஆர்.காங்., மாநில பொது செயலாளர் ஜெயபால், மேற்கு மாவட்ட தலைவர் பாலமுருகன், மாநில செயலாளர் ஜவகர், அழகானந்தம் மாநில பட்டியல அணி தலைவர் அன்பு, இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன், மாநில தொண்டரணி தலைவர் வீராசாமி, மாநில மகளிர் அணி தலைவி ரேவதி பற்குணம், மாநில இலக்கிய அணி தலைவர் செந்தாமரைக்கண்ணன் அமைப்புசாரா தொழிலாளர் அணி காத்தவராயன், கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன் உள்ளிட்ட பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பிறந்தநாளை முன்னிட் டு, 2,000 பேருக்கு புடவைகள் மற்றும் கோதுமை மாவு, ரவை, சர்க்கரை போன்ற மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 2,500 பேருக்கு, அசைவ விருந்து அளிக்கப்பட்டது. மேலும், 10 பேருக்கு, முதல்வர் நிவாரண நிதி, தொகுதியை 30 குடும்பங்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.
16-Sep-2025