உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லா பாபிலோன் மேன்ஷன் ரெசிடென்சி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்

லா பாபிலோன் மேன்ஷன் ரெசிடென்சி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்

புதுச்சேரி : புதுச்சேரியில், லா பாபிலோன் மேன்ஷன் ரெசிடென்சியை, முதல்வர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.புதுச்சேரி கருவடிக்குப்பம், டி.வி., நகரில், லா பாபிலோன் மேன்ஷன் புதிய ரெசிடென்சியை முதல்வர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். அருள் வரவேற்றார். ஜோஷி சங்கர் தலைமை தாங்கினார். ஜெயராமன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் நமச்சிவாயம், எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள் பிரகாஷ்குமார், ஜான்குமார், வைந்தியநாதன், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதுகுறித்து, ரெசிடென்சி உரிமையாளர், ஜோஷி சங்கர் கூறுகையில், 'புதுச்சேரியில் புதிதாக லா பாபிலோன் மேன்ஷன் ரெசிடென்சி திறக்கப்பட்டுள்ளது. இங்கு குடும்பத்தினருடன் வந்து தங்குபவர்களுக்கு பாதுகாப்பாகவும், அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரெசிடென்சியில், நல்ல ஆரோக்கியமான உணவுகள், காற்றோட்டமான 30 அறைகள், மல்டி ஹால் ஆகிய வசதிகள் உள்ளது' என்றார்.எழில் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை