உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அப்பா பைத்தியம் சாமி கோவிலில் முதல்வர் தரிசனம்

அப்பா பைத்தியம் சாமி கோவிலில் முதல்வர் தரிசனம்

புதுச்சேரி: புதுச்சேரி அப்பா பைத்தியம் சாமி கோவிலில் முதல்வர் ரங்கசாமி தரிசனம் செய்தார்.கோரிமேடு, வீம கவுண்டன்பாளையத்தில், அப்பா பைத்தியம் சாமி கோவிலில், குருபூஜையையொட்டி, நேற்று காலை 7:30 மணிக்கு திருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து காலை 8:00 மணிக்கு தமிழில் வேள்வி மற்றும் மலர் போற்றி திருமுறை விண்ணப்ப வழிபாடு நடைபெற்றது. காலை 10:30மணிக்கு அப்பா பைத்தியம் சாமிக்கு மஞ்சனம், திருக்குட நன்னீராட்டை தொடர்ந்து, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு, குருபூஜை விழா நடந்தது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை