மேலும் செய்திகள்
பவுர்ணமியை முன்னிட்டு 108 பால்குட அபிஷேகம்
12-May-2025
புதுச்சேரி:தளிஞ்சை காளியம்மன் கோவிலில், 43ம் ஆண்டு சித்திரை முழு நிலவு வழிபாடு இன்று நடக்கிறது.திலாஸ்பேட்டையில் தளிஞ்சை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 43வது ஆண்டு சித்திரை முழு நிலவு 108 பால்குட அபிேஷகம் மற்றும் 108 விளக்கு வழிபாடு இன்று (12ம் தேதி) நடக்கிறது.இதையொட்டி, காலை 4:30 மணிக்கு கணபதி வேள்வி, 7:00 மணிக்கு 108 பால்குடம் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு அபிேஷகம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரம், முழு நிலவு வழிபாடு, தீபாராதனை நடக்கிறது.தொடர்ந்து, இரவு 7:00 மணி முதல் மூன்று குழுக்களாக 108 விளக்கு வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழு மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
12-May-2025