கடற்கரை சாலையில் குடிமகன்கள் அட்டகாசம் வாக்கிங் செல்வோர் அவதி
புதுச்சேரி : கடற்கரை சாலையில் வாக்கிங் செல்வோரிடம், பணம் கேட்டு குடிமகன்கள் டார்ச்சர் செய்கின்றனர். புதுச்சேரியின் கடற்கரை சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியூர் சுற்றுலா பயணிகள் நடை பயிற்சி செய்வது வழக்கம். மேலும் நுாற்றுக்கு மேற்பட்ட உள்ளூர் மக்கள் கடலின் அழகை ரசித்தபடி, நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். அரசியல் பிரமுகர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என பல்வேறு தரப்பினரும் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சிக்கு பின் ஓய்வு எடுக்க பீச் ரோட்டில் வரிசையாக கிராணைட் கற்களில் இருக்கை உள்ளது. இந்த இருக்கைகளில், மதுபோதை ஆசாமிகள் படுத்து துாங்குகின்றனர். அதிகாலை நேரம் வாக்கிங் செல்லும் பொதுமக்களிடம், குடிமகன்கள் 10 ரூபாய் கொடு என டார்ச்சர் செய்கின்றனர். வாக்கிங் செல்லும் முதியோர்கள் சில நிமிடம் இருக்கையில் அமர்ந்தால், குடிமகன்கள் பணம் கேட்டு டார்ச்சர் செய்கின்றனர். பணம் இல்லை என கூறினாலும் விடுவதில்லை. அதிகாலை 5:00 மணி முதல் காலை 8:00 மணி வரை கடற்கரை சாலையில் போலீசாரின் ரோந்து இல்லததால், குடிமகன்கள் அட்டகாசம் அதிகமாக உள்ளது.