உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சி.ஐ.டி.யு., மாநில மாநாடு 

சி.ஐ.டி.யு., மாநில மாநாடு 

புதுச்சேரி,: இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யு.,) சார் பில் புதுச்சேரி மாநில 13வது மாநாடு குயவர்பாளையம், தனியார் திருமண நிலையத்தில் நடந்தது. மாநில துணைத் தலைவர் முருகன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். சி.ஐ.டி.யு அகில இந்திய துணைத் தலைவர் சவுந்தரராஜன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். அகில இந்திய விவசாயிகள் சங்க செயலாளர் சங்கர், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில், நிர்வாகிகள் ராமசாமி, ராஜ்குமார், மணிபாலன், வடிவேலு, ஜீவானந்தம், பச்சமுத்து, மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சி.ஐ.டி.யு., செயற்குழு உறுப்பினர் கோபிகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ