நகராட்சி பள்ளியில் செம்மொழி தின விழா
புதுச்சேரி : கோட்டக்குப்பம் நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி செம்மொழி தின விழா நடந்தது.நகர்மன்றத் தலைவர் ஜெயமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜீனத் பீவி முபாரக் முன்னிலை வகித்தார். விழாவில், 10வது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு, 25வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சரவணன் ஏற்பாட்டில் முதலிடம் பெற்ற4 மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம்,இரண்டாம் இடம் பிடித்த 3 மாணவர்களுக்கு தலா 5 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்த 3 மாணவர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் செல்வி வரவேற்றார். பள்ளி தொடர்ந்து, 9 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து வருவதற்கு காரணமான 22 ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் வினோபாரதி, கவுன்சிலர்கள் கலா மணிகண்டன், ஆதிலட்சுமி பாஸ்கரன், வீரப்பன், சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.