கொடாத்துார் அரசு பள்ளியில் சுடு களிமண் சிற்ப பயிற்சி
திருக்கனுார்; கொடாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் வளர் இளம் பருவ மாணவர்களுக்கான ஒருநாள் சுடு களிமண் சிற்ப பயிற்சி முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் ரூபஸ் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் வள்ளி வரவேற்றார். கலைமாமணி முனுசாமி, சுடு களிமண் சிற்பம் செய்யும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில், மாணவர்கள் யானை, பறவை, விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றை செய்து மகிழ்ந்தனர். ஓவிய ஆசிரியர் சம்பத் நீஸ் நன்றி கூறினார்.