உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காமராஜர் நகர் தொகுதியில் துப்புரவு பணி

காமராஜர் நகர் தொகுதியில் துப்புரவு பணி

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதியில் காங்., பொறுப்பாளர் தேவதாஸ் முயற்சியில் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. காமராஜர் நகர் தொகுதி, பாலாஜி நகர், ஆரோக்கிய மாதா கார்டன் மற்றும் திருமுடி சேதுராமன் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதாள சாக்கடை கழிவுநீர் அடைப்பு, வாய்கால் அடைப்பு, சாலை சீரமைப்பு, குப்பை துார் வாரப்படமால் உள்ளதாக, காமராஜர் நகர் தொகுதி காங்., பொறுப்பாளர் தேவதாசிடம் தெரிவித்தனர். இதையடுத்து காங்., சீனியர் துணை தலைவர் தேவதாஸ், சுவட்ச் பாரத் கிரீன் வாரியர், உழவர்கரை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்தார். காங்., நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை