உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடற்கரை சாலையில் துப்புரவு பணி

கடற்கரை சாலையில் துப்புரவு பணி

புதுச்சேரி : தேசிய இளைஞர் தினத்தையொட்டி, புதுச்சேரி நகராட்சி சார்பில், கடற்கரை சாலையில் துப்புரவு பணி நடந்தது.புதுச்சேரி உள்ளாட்சி துறை இயக்குனர் சக்திவேல், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி வழிகாட்டுதலின்படி, தேசிய இளைஞர்கள் தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் 3 கி.மீ துாரம் துப்புரவு பணி நடந்தது.புதுச்சேரி நகராட்சி துாய்மை பணியாளர்களுடன் இணைந்து, தன்னார்வ அமைப்பு, 50க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரிகளில் இருந்து 1250 நாட்டு நலப் பணித் திட்ட மாணவ மாணவிகள், நகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், ஸ்வச்சத்தா கார்பரேஷன், கிரீன்வாரியர்ஸ் அமைப்புகளுடன் இணைந்து கடற்கரையில் துாய்மை பணிகளை மேற்கொண்டனர். 4.5 டன் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டது.தூய்மைப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கும், நாட்டு நலப் ஒருங்கிணைப்பாளர்கள், மாணவ பணித் திட்ட மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி