உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குளுனி சி.பி.எஸ்.இ., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

குளுனி சி.பி.எஸ்.இ., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

வில்லியனுார்: ஒதியம்பட்டு குளுனி சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு குளுனி சி.பி.எஸ்.இ., பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ப153 மாணவியர் எழுதினர். அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். மாணவி சஹானா 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம், மாணவி நிவேதிதா 491 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவிகள் அக் ஷரா மற்றும் பிரவினா பிரதீப் ஆகியோர் 490 மதிப்பெண்கள் மூன்றாம் இடம், மாணவி மித்ரா 489 மதிப்பெண் பெற்று நான்காம் இடம் பிடித்தனர்.பாடவாரியாக தமிழில் மூன்று மாணவியர், பிரெஞ்சு பாடத்தில் ஒருவர், கணித பாடத்தில் இரண்டு மாணவியர்கள் மற்றும் ஐ.டி., பிரிவில் 19 மாணவியர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.23 மாணவியர் 95 சதவீதத்திற்கு மேலும், 40 பேர் 90 சதவீதத்திற்கு மேலும், 69 பேர் 80 சதவீதத்திற்கு மேலும், மற்ற மாணவியர் அனைவரும் 65 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களை பள்ளி முதல்வர் ஜெய்ஸ் ஜான் மற்றும் தாளாளர் எமிலினா ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ