மேலும் செய்திகள்
முதல்வர் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா
21-Oct-2026
புதுச்சேரி: வீடு கட்டும் திட்டத்தில் ரூ. 5 லட்சத்திற்கான நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை முதல்வர் ரங்கசாமி வழங்கி துவக்கி வைத்தார். புதுச்சேரி அரசின் 2026-27ம் நிதியாண்டு அறிவிப்பின்படி, காமராஜர் நுாற்றாண்டு வீடு கட்டும் திட்டம் மற்றும் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகரம்) 2.0 திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி , அமைச்சர் ராஜவேலு ஆகியோர் விண்ணப்ப படிவங்களை வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். விண்ணப்ப படிவங்களை தற்காலிக சபாநாயகர் அன்பழகன், எம்.எல்.ஏக்கள்., அசோக் ஆனந்த் அய்யப்பன், விக்னேஷ் கண்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
21-Oct-2026