உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சிக்கு முதல்வர், அமைச்சருக்கு அழைப்பு

ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சிக்கு முதல்வர், அமைச்சருக்கு அழைப்பு

புதுச்சேரி, செப். 25– ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சிக்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மார்டின் குழுமம், ஸ்பேஸ் ேஷான் இந்தியா நிறுவனம், குளோபல் ெஹல்ப் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் இணைந்து மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில், சென்னையில் ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் அக்., 10ம் தேதி சென்னை இ.சி.ஆர்., திருவிடந்தை பகுதியில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், இந்தியா முழுதும் இருந்து, 20 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். புதுச்சேரியில் இருந்து 2 ஆயிரத்து 500 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரிடம், ல.ஜ.க., தலைவர் ஜோஸ்சார்லஸ்மார்டின் எம்.எல்.ஏ., நேரில் அழைப்பிதழை வழங்கினார். அப்போது, ஸ்பேஸ் ேஷான் இந்தியா நிறுவனர் ஆனந்த்மேகலிங்கம், ல.ஜ.க., நிர்வாக பொதுசெயலாளர் ராம்குமார், பொது செயலாளர்கள் துரைசாமி, பிரபாகரன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்