புதுச்சேரி: கடலுார் சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு, அரசு சார்பில், முதல்வர் ரங்கசாமி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ., க்கள் ஆறுமுகம், பாஸ்கர், ரமேஷ், லட்சுமிகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்., சார்பில் மரியாதை காங்., சார்பில், மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.எல்.ஏ., வைத்தியநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பா.ஜ., சார்பில், மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் உட்பட பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டு, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.