உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுக்கு இலவச சைக்கிள் முதல்வர் ரங்கசாமி வழங்கல்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் முதல்வர் ரங்கசாமி வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா தட்டாஞ்சாவடி சேக்கிழார் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. கல்வித்துறையின் பெண் கல்வி துணை இயக்குநர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை டார்லிங் வின்சி இந்திரா வரவேற்றார். அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முதல்வர் ரங்கசாமி, மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் நாகராஜ், ஆசிரியர்கள் அறிவழகன், பாரதிதாசன், முருகன், விஜய வித்யானந்தன், ஆசிரியைகள் பாரதி, பாலா, ஐஸ்வர்யா மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை நாராயணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !