உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூட்டுறவு வங்கி பேரவை கூட்டம்

கூட்டுறவு வங்கி பேரவை கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கியின் 68வது பொது பேரவை கூட்டம், நுாறடி சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் வங்கி பொது மேலாளர் ரமேஷ் வரவேற்றார். நிர்வாகிகள் மோகன்குமார், 2025–26ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை வாசித்தார். மேலாண் இயக்குனர் வரலட்சுமி தணிக்கை அறிக்கையும் தொடர்ந்து, 2027–28ம் நிதியாண்டிற்கான உத்தேச வரவு செலவு திட்ட அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில், சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மற்றும் வரவு, செலவு திட்டங்களுக்கு பொதுப் பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. வங்கி அதிகாரிகள், உறுப்பினர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அபிவிருத்தி அதிகாரி சத்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !