உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  100 சதவீத ஓட்டு பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் கலெக்டர் துவக்கி வைப்பு   

 100 சதவீத ஓட்டு பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் கலெக்டர் துவக்கி வைப்பு   

புதுச்சேரி: 100 சதவீத ஓட்டு பதிவு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை, மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் குலோத்துங்கன் கொடியசைத்து துவக்கி வைத்தார். புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, 100 சதவீதம் ஓட்டு பதிவை வலியுருத்தி, மாவட்ட தேர்தல் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பிரசார வாகனத்தை, மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் குலோத்துங்கன் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனத்தில், 100 சதவீதம் ஓட்டு பதிவு, வாக்களிப்பதன் அவசியம், இளம் வாக்காளர்கள் தவறாமல் தங்களது ஓட்டுகளை பதிவு செய்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன், ஒலிப் பெருக்கி மூலமாகவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில், சுமார் பத்து நாட்கள் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இந்த வாகனம் பயணிக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ