தங்கம் வென்ற மாணவருக்கு கல்லுாரி முதல்வர் வாழ்த்து
திருபுவனை : தேசிய அளவிலான வளு துாக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரி மாணவர் விஷாலுக்கு கல்லுாரி முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.இந்திய வளு துாக்கும் சங்கத்தின் சார்பில், கர்நாடக மாநிலம் தேவனகிரியில் சிறப்பு பிரிவினருக்கு அகில இந்திய அளவிலான வளு துாக்கும் சேம்பியன்ஷிப் போட்டி கடந்த ஜூன் மாதம்நடந்தது. இப்போட்டியில் கலந்துகொண்ட, கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரியின் பி.பி.ஏ., (சுற்றுலாத்துறை) முதலாம் ஆண்டு மாணவர் விஷால், 59 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் ஸ்குவார்டு பிரிவில் 190 கிலோ எடையை துாக்கி அகில இந்திய அளவில் புதிய சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவர் விஷாலுக்கு கல்லுாரி முதல்வர் கனகவேல் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பொன்னாடை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பயிற்சியாளர் பாக்கியராஜ் உடன் இருந்தார்.