உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓரின சேர்க்கையால் விபரீதம் கல்லுாரி மாணவி தற்கொலை

ஓரின சேர்க்கையால் விபரீதம் கல்லுாரி மாணவி தற்கொலை

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே இளம் பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நெல்லிக்குப்பம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 18 வயது பெண். தனியார் கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர், அதே கல்லுாரியில் 20 வயது மாணவியுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த விபரம் தெரிந்த 18 வயது பெண்ணின் பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால், 20 வயது பெண்ணுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண், இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன 18 வயது மாணவி நேற்று வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 20 வயது மாணவி மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய்க்கு எழுதி வைத்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை