உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இன்ஸ்டாகிராம் தோழியுடன் கல்லுாரி மாணவி மாயம்

இன்ஸ்டாகிராம் தோழியுடன் கல்லுாரி மாணவி மாயம்

பாகூர்: தனியார் பொறியியல் கல்லுாரி மாணவி இன்ஸ்டாகிராம் தோழியுடன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலுார் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த வந்தனா,18; இவர், புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, பொறியியல் கல்லுாரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக வந்தனா விடுதிக்கு வரவில்லை என வார்டன் போன் செய்து, அவரது பெற்றோரிடம் கூறி உள்ளார். அதன்பேரில், நேற்று முன்தினம் வந்தனாவின் தாய் கிருமாம்பாக்கம் விடுதிக்கு வந்து விசாரித்துள்ளார். அதில், கடந்த 7ம் தேதி மாலை வந்தனா, இன்ஸ்டாகிராம் தோழியான பிரியா (எ) ரோஸி என்பவருடன், விடுதியில் இருந்து துணிகளை எடுத்து கொண்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து தாய் அளித்த புகாரின்பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, வந்தனாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை