உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்லுாரி மாணவி தற்கொலை

கல்லுாரி மாணவி தற்கொலை

புதுச்சேரி:புதுச்சேரி, வாணரப்பேட் ஜெயராம் செட்டியார் தோட்டம், இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அன்னம்மாள். கேபிள் 'டிவி' தொழில் செய்கிறார். இவரது கணவர் முருகவேல் 10 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றுவிட்டார். இவரது மூத்த மகள் சோபனா எலிசபெத், 19, அரசு மகளிர் கல்லுாரியில் பி.ஏ., 3ம் ஆண்டு படித்தார்.கடந்த 19ம் தேதி, அன்னம்மாள் கேபிள் தொழிலுக்கு சென்று விட்டார்.சோபனா கல்லுாரிக்கு செல்லாமல் வீட்டில் மொபைல் போன் பார்த்து கொண்டிருந்தார். மதியம் வீட்டுக்கு வந்த அன்னம்மாள், மகள் சோபனாவை கண்டித்தார். பின்னர் சாப்பிட்டுவிட்டு சோபனா தனி அறையிலும், அன்னம்மாள் மற்றும் அவரது இளைய மகனும் ஹாலில் படுத்து துாங்கினர். காலை 5:00 மணிக்கு சோபனாவின் அறைக் கதவை தட்டிய போது கதவு திறக்கவில்லை.சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது சோபனா துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அன்னம்மாள் அளித்த புகாரின்பேரில், ஒதியஞ்சாலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி