உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வண்ணம் நிரப்பும் போட்டி: ஜெயதுர்கா பள்ளி சாதனை

 வண்ணம் நிரப்பும் போட்டி: ஜெயதுர்கா பள்ளி சாதனை

நெட்டப்பாக்கம்: மாநில அளவிலான வண்ணம் நிரப்புதல் போட்டியில் சூரமங்கலம் ஜெயதுர்கா பள்ளி 6ம் வகுப்பு மாணவி முதல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார். அபகாஸ் சார்பில், மாணவர்களுக்கு வண்ணம் நிரப்புதல் போட்டி மதகடிப்பட்டில் நடந்தது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 100க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி சூரமங்கலம் ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவி கோவர்தினி முதல் பரிசும், மாணவர் புவனேஷ் இரண்டாவது பரிசும் பெற்றனர். அவர்களுக்கு பள்ளி நிர்வாகி விஜயாமணி கேடயம் வழங்கி, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை