அரசு பள்ளியில் வண்ணங்கள் தினம்
புதுச்சேரி: முத்திரையர்பாளையம் ஆயி அம்மாள் அரசு உயர்நிலைப்பள்ளியில் முன் மழலையர்களுக்கான வண்ணங்கள் தினம் கொண்டாடப்பட்டது.சரோஜா வரவேற்றார். தலைமையாசிரியர் பாஸ்கர ராசு வண்ணங்கள் குறித்து கலந்துரையாடினார். தொடர்ந்து வண்ணங்கள் தின விழாவில், மஞ்சள் நிற உடையணிந்து பங்கேற்ற மழலைகள், பல்வேறு பொருட்களால் வகுப்பறையை அலங்கரித்து இருந்தனர். மழலைகளுக்கு மஞ்சள் நிற பென்சில் பாக்ஸ், ஸ்மைலிகள் பரிசாக வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஏன்ஜெலின், சாவித்ரி, சுதீஷ், சுஜாமலர், சிவமதி ஆகியோர் செய்திருந்தனர்.