மீனவர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.5.79 கோடி வழங்கும் பணி துவக்கம்
புதுச்சேரி: மீனவர்களுக்கு மழைக்காலம் மற்றும் தடைக்காலம் நிவாரணம் வழங்கும் பணியை முதல்வர் துவக்கி வைத்தார்.மீனவர்களுக்கு ஆண்டுதோறும் மழைக்கால நிவாரணமாக குடும்பம் ஒன்றிற்கு ரூ.3,000 மீனவர் நலத்துறையின் மூலம் வழங்கப்படுகிறது.இந்தாண்டிற்கு முதற்கட்டமாக 19,302 குடும்பங்களுக்கு ரூ.5.79 கோடி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதேபோன்று, ஆண்டு தோறும் மீனவக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இந்தாண்டிற்கான மீன்பிடித் தடைக் கால நிவாரணம், முதற்கட்டமாக 18,779 குடும்பங்களுக்கு தலா ரூ.6,500- வீதம் மொத்தம் ரூ.12,20,63,500- கடந்த ஜூன் மாதம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.இரண்டாம் கட்டமாக 523 குடும்பங்களுக்கு தலா ரூ.6500 வீதம் மொத்தம் ரூ.33,99,500 வழங்கப்பட உள்ளது. இந்த மழைக்கால மற்றும் தடைக்கால நிவாரண தொகைகள் வழங்கும் பணியை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலையில், முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார்.இந்த தொகை மீனவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது.எம்.எல்.ஏ., க்கள் கல்யாணசுந்தரம், செந்தில்குமார், பாஸ்கர் கலந்து கொண்டனர்.