ஓட்டுச்சாவடிகளில் ஆணையர் ஆய்வு
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் மற்றும் மணவெளி தொகுதியில் உள்ள ஒட்டுச்சாவடி மையங்களை ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். புதுச்சேரியில் வரும் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடப்பதையொட்டி, ஓட்டுச்சாவடி மையங்களை தேர்தல் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரியாங்குப்பம் தொகுதியில் 31, மணவெளி தொகுதி 37 என, மொத்தம் 68 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. இரண்டு தொகுதிகளில் உள்ள 68 ஓட்டுச்சாவடி மையங்களையும் ஆணையர் விநாயகமூர்த்தி பார்வையிட்டார். அங்கு பாதுகாப்பு, குடிநீர் அடிப்படை வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான நடைபாதை இருக்கிறதா என, ஆய்வு மேற்கொண்டார்.