உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பருவ மழை முன்னெச்சரிக்கை கிராமங்களில் ஆணையர் ஆய்வு

பருவ மழை முன்னெச்சரிக்கை கிராமங்களில் ஆணையர் ஆய்வு

திருக்கனுார் : புதுச்சேரியில் கனமழையை முன்னிட்டு, திருக்கனுாரில் குடிநீர் தட்டுபாடு ஏற்படாமல் இருக்க நிறுத்தப்பட்டுள்ள ஜெனரேட்டர்களைஆணையர் ஆய்வு செய்தார்.புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை காரணமாக, முதல்வர் ரங்கசாமி அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளார். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து கிராமங்களில் கனமழையால் பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அப்பணிகளை, ஆணையர் எழில்ராஜன் நேற்று ஆய்வு செய்தார்.திருக்கனுாரில் குடிநீர் தட்டுபாடு ஏற்படாமல் இருக்க நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டு ஜெனரேட்டர்களை பார்வையிட்டு, அதற்கான டீசல் உள்ளிட்ட தேவையான பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.உதவி பொறியாளர் மல்லிகா அர்ஜூனா மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை