ரூ. 10 ஆயிரம் மழை நிவாரணம் வழங்க கம்யூ., வலியுறுத்தல்
புதுச்சேரி: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கிட வேண்டுமென சோசியலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் (சுசீ) கம்யூ., வலியுறுத்தியுள்ளது.மாநில செயலாளர் லெனின்துரை அறிக்கை:புயல் மழையால் புதுச்சேரி பெரிய சேதத்தை சந்தித்துள்ளது. நகர பகுதிகளில் நிறுத்தப்பட்ட பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி முழுதும் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் முற்றிலும் சேதம் அடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழக்கம் போல ரேஷன் அட்டைக்கு முதல்வர் ரூ. 5,000 அறிவித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருட்களுக்கு ஏற்ப இழப்பீடு வழங்காமல், அனைவருக்கும் இழப்பீடு அறிவிப்பது பொருத்தமாக இருக்காது. மத்திய பா.ஜ., அரசு புயல் பாதிப்பிற்கு உடனடியாக ரூ. 500 கோடி வழங்கிட வேண்டும்.காப்பீடு நிறுவனங்களிடம் அரசு பேசி கார், பைக் வாகனங்களுக்கு இழப்பிடு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால், நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க, அந்தந்த பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்திட வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.