உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு

மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு

புதுச்சேரி: மின்சாரம் தாக்கி இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. ஏம்பலம் தொகுதி, கந்தன்பேட் பால்வாடி வீதியைச் சேர்ந்த கனகராஜ், கடந்த ஆண்டு மின்சாரம் தாக்கி இறந்தார். அவரது குடும்பத்திற்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. இதற்கான ஆணையை, கனகராஜ் குடும்பத்தினரிடம் முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டசபையில் வழங்கினார். சபாநாயகர் செல்வம், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., துறை இயக்குநர் இளங்கோவன், கண்காணிப்பாளர் வேல்முருகன் லெபாஸ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை