புகார் பெட்டி
நிழற்குடை தேவை
அரியாங்குப்பம் புறவழிச்சாலை சிக்னல் அருகே பயணியர் நிழற்குடை இல்லாமல் இருப்பதால், பொதுமக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டுவருகின்றனர்.ராணி, அரியாங்குப்பம். மின் கம்பத்தில் விளம்பர தட்டி
முருங்கப்பாக்கத்தில் இருந்து, தவளக்குப்பம் வரை சாலை மின் கம்பத்தில், விளம்பர தட்டிகள் கட்டியுள்ளதால், விபத்து ஏற்படுவதற்குள், பொதுப்பணித்துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜான், முருங்கப்பாக்கம். சாலையில் கழிவுநீர்
ராஜ்பவன், காந்தி வீதி காமாட்சி அம்மன் கோவில் தெரு சந்திப்பில், கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.ஜெகதீசன், புதுச்சேரி. நாய்கள் தொல்லை
பிள்ளைத் தோட்டம் கங்கை அம்மன் கோவில் தெருவில், தெரு நாய்கள் அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.சந்திரா,பிள்ளைத் தோட்டம். கொசுக்கள் உற்பத்தி
ரெட்டியார்பாளையம் சீனிவாச நகரில், காலிமனையில் கழிவுநீர் தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தி அதிகமாக பெருகி வருகிறது.காந்திமதி, ரெட்டியார்பாளையம்.