புகார் பெட்டி
தெரு விளக்கு எரியவில்லை
அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே தெரு விளக்கு இல்லாமல், இருண்டு கிடக்கிறது. மணிமாறன், தவளக்குப்பம். பகலிலும் எரியும் விளக்கு
முதலியார்பேட்டை போலீஸ் குடியிருப்பு பகுதியில் தெரு விளக்கு இரவு, பகலாக எரிந்து வருகிறது.அன்பழகன், முதலியார்பேட்டை. இணைப்பு சாலையில் பள்ளம்
வில்லியனுார் ஆரியப்பாளையம் புதிய மேம்பாலம் இணைப்பு சாலையில், மெகா பள்ளம் உள்ளதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. ரஜினிமுருகன், வில்லியனுார். காலி மனையில் கழிவுநீர் தேக்கம்
முத்தியால்பேட்டை செந்தாமரை நகரில், காலிமனையில், புதர்கள் மண்டியும், கழிவுநீர் தேங்கி நிற்கிறது.பாலமுருகன், முத்தியால்பேட்டை. நாய்கள் தொல்லை
கருவடிக்குப்பம் சண்முகா நகரில், நாய்கள் சுற்றி திரிவதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சீனு, கருவடிக்குப்பம். பள்ளத்தால் வாகன நெரிசல்
கடலுார் சாலை நைனார்மண்டபத்தில், தோண்டப்பட்ட பள்ளதால், வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ராமகிருஷ்ணன், புதுச்சேரி.