உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூர் காவல் நிலையத்தில் புகார் பெட்டி அமைப்பு

பாகூர் காவல் நிலையத்தில் புகார் பெட்டி அமைப்பு

பாகூர்: பாகூர் காவல் நிலைய நுழைவு வாயில் பகுதியில், புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் உள்ள காவல் நிலையங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பாகூர் காவல் நிலைய நுழைவு வாயில் பகுதியில் புகார் பெட்டி நேற்று வைக்கப்பட்டது.காவல் நிலையம் வந்து அதிகாரிகளை நேரடியாக சந்தித்து புகார் தெரிவிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் பொது மக்கள் தங்களது புகார்களை, புகார் பெட்டியில் மனுவாக எழுதி போடலாம்.காவல் நிலைய அதிகாரி தினமும் அந்த புகார் பெட்டியை திறந்து பார்த்து, அதிலுள்ள புகார்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்.குறிப்பாக, பெண்கள், சிறார், குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகளை தெரிவிக்கும் வகையில், இந்த புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாக பாகூர் போலீசார் தெரிவித்தனர். எந்த தயக்கமுமின்றி புகார் பெட்டியில், புகார்கள் தெரிவிக்கலாம்; ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை