| ADDED : நவ 24, 2025 06:22 AM
மின் அளவீடு செய்ய வேண்டும் கரிக்கலாம்பாக்கத்தில் இந்த மாதத்திற்கான மின் கட்டண அளவீடு செய்யாததால், மின் கட்டணம் அதிகரிக்கும் என, பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்து, கரிக்கலாம்பாக்கம். சாலை படுமோசம் முத்தியால்பேட்டை கணேஷ் நகர், பாப்பம்மாள் கோவில் வீதியில் ரோடு மோசமாக உள்ளது. பரமானந்தம்ராஜிவ், முத்தியால்பேட்டை. கொசு தொல்லை வேல்ராம்பட்டு, மறைமலை நகர் காலிமனையில் கழிவுநீர் தேங்கி கொசு தொல்லை அதிகமாக உள்ளது. சிவராம், வேல்ராம்பட்டு. மெகா பள்ளம் கடலுார் சாலை, இடையார்பாளைம் அருகில் மெகா பள்ளங்கள் விழுந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். சரவணன், புதுச்சேரி. பயணியர் நிழற்குடை தேவை அரியாங்குப்பத்தில் பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மாதேஷ், அரியாங்குப்பம். ஜிப்மருக்கு இரவில் பஸ் தேவை புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ரவி, புதுச்சேரி.