புகார் பெட்டி
போக்குவரத்து நெரிசல் உப்பளம் சாலையில் மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சுபாஷ், உப்பளம். கோபுரத்தில் செடிகள் காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் செடிகள் வளர்ந்துள்ளதை அகற்ற வேண்டும். தட்சணாமூர்த்தி, புதுச்சேரி. சாலை படுமோசம் லாஸ்பேட்டை, ராஜாஜி நகர் மெயின் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பாலசுப்ரமணியன், லாஸ்பேட்டை. ஜிப்மருக்கு இரவில் பஸ் தேவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சரஸ்வதி, கோரிமேடு. மெகா பள்ளம் பாக்கமுடையான்பட்டு உடையார் தெருவில், மெகா பள்ளம் இருப்பதால், வாகன விபத்து நடந்து வருகிறது. ஆசியகுமார், பாக்கமுடையான்பட்டு.