மேலும் செய்திகள்
புதுச்சேரி: புகார் பெட்டி
01-May-2026
போக்குவரத்து நெரிசல்: மரப்பாலம் சந்திப்பில் வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மகேஷ், மரப்பாலம்.வாய்க்கால் துார்வார வேண்டும்: தொண்டமாநத்தம் மெயின் ரோட்டில் வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால், துார் வாரவேண்டும். ராஜகுமாரி, தொண்டமாநத்தம்.குண்டும்: மேட்டுப்பாளையம் - மூலக்குளம் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கர்ணன், புதுச்சேரி. தெரு நாய்கள் தொல்லை: மூலக்குளம் மோதிலால் நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். அருண்குமார், மூலக்குளம். மின் விளக்கு எரியவில்லை: அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் மின் விளக்கு எரியாமல் உள்ளது. கபிலன், அரியாங்குப்பம். சாலையில் மண் குவியல்: கடலுார் சாலை அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை சாலையோரத்தில் மண் குவியல் உள்ளதால், இரு சக்கர வானக ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மாறன், புதுச்சேரி. வாகனங்களால் இடையூறு: ரங்கப்பிள்ளை வீதியில் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. ராமசாமி, புதுச்சேரி.
01-May-2026