உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தெரு விளக்கு எரியவில்லை:

தெரு விளக்கு எரியவில்லை:

மண்ணாடிப்பட்டு மும்மரம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. சிவராஜன், மண்ணாடிப்பட்டு. குப்பை தேங்கி கிடக்கிறது: குயவர்பாளையம் ஏழை மாரியம்மன் கோவில் வீதியில் குப்பை வண்டி சரியாக வராமல் உள்ளதால் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. சாந்தி, குயவர்பாளையம். ---------------------------------------- தெரு நாய்கள் தொல்லை: தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். பாஸ்கர், கோரிமேடு. ------------------------------------- சாலையில் ஆக்கிரமிப்பு: அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. பரந்தாமன், அரும்பார்த்தபுரம். ----------------------------------------- போக்குவரத்து நெரிசல்: மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மகேஷ், மரப்பாலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !