உள்ளூர் செய்திகள்

 புகார் பெட்டி

ஊர் பெயர் தவறு புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் மயிலம் பஸ் நிற்கும் இடத்தில் ஊரின் பெயர் தவறாக இருப்பதால் நகராட்சியினர் திருத்தி எழுத வேண்டும். நாகராஜன், புதுச்சேரி. தெரு நாய்கள் தொல்லை அரியாங்குப்பம் மணவெளி என்.ஆர். நகர் ஆற்றுப்பாலம் அருகே தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. மாலதி, அரியாங்குப்பம். போக்குவரத்து நெரிசல் முதலியார்பேட்டை ரோடியர் மில் வீதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. புவனேஷ், முதலியார்பேட்டை. மாற்று இடத்தில் குப்பை தொட்டிஒயிட் டவுன் பட்டேல் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் குப்பை தொட்டியை அகற்றி மாற்று இடத்தில் வைக்க வேண்டும். கிருஷ்ணசாமி, புதுச்சேரி. உடற்பயிற்சி மையம் இயங்குமா? முத்தியால்பேட்டையில் உள்ள உடற்பயிற்சி மையம் இயங்காமல் வெறும் காட்சிப் பொருளாக உள்ளது. ஹரி, முத்தியால்பேட்டை. விபத்து அபாயம் வில்லியனுாரில் உள்ள சிக்னலில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதியை மீறுவதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. ரஜினி முருகன், வில்லியனுார். அடிக்கடி மின் தடை நைனார்மண்டபம் பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். செல்வன், முதலியார்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !