சாலை ஆக்கிரமிப்பு
திலாசுபேட்டை, சத்தியமூர்த்தி நகர், கனகன் ஏரி ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தேன்மொழி, திலாசுபேட்டை. மூலக்குளம் மோதிலால் நகர் சாலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. சிவா, மூலக்குளம். தெரு நாய்கள் தொல்லை உழவர்கரை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். அருண், உழவர்கரை. சாலை படுமோசம் மூலக்குளம் முதல் மேட்டுப்பாளையம் வரை சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். கலியபெருமாள், மூலக்குளம். குப்பை வண்டி வருமா? காலாப்பட்டு, பாரதி நகர், 7வது குறுக்கு தெருவில் குப்பை வண்டி சரியாக வராமல் உள்ளது. கணேசன், காலாப்பட்டு. ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் தேவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர். கண்ணதாசன், புதுச்சேரி.