மேலும் செய்திகள்
பெயர்தான் வி.ஐ.பி.நகர்; சாலையில் சேறு, கழிவுநீர்
06-Jul-2026
: லாஸ்பேட்டை இ.சி.ஆர்., தாசில்தார் அலுவலக வாசலில் உள்ள கழிவு நீர் கால்வாயில், பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்துள்ளது. தீபிகா, லாஸ்பேட்டை. சிக்னல் கம்பம் சாய்ந்தது: இ.சி.ஆர்., ஏர்போர்ட் சாலை சந்திப்பு சென்டர் மீடியனில், உள்ள சோலார் சிக்னல் கம்பம் கீழே சாயந்துள்ளது. தனுஷ், சாரம். வாய்க்காலில் கழிவு நீர் கலப்பு: வில்லியனுார் மணவெளி தண்டுக்கரை வீதி பெரிய வாய்க்காலில், கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. குமார், வில்லியனுார். குண்டும் குழியுமான சாலை: லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் மெயின் ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பத்மாவதி, கிருஷ்ணா நகர். மின் விளக்கு எரியவில்லை: உறுவையாறு பெருமாள் சிலை மேல் உள்ள விளக்கு எரியவில்லை. கோகுல், உறுவையாறு.
06-Jul-2026