உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

புதுச்சேரி: பணி ஓய்வு பெற்ற விளையாட்டு ஆணைய அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. புதுச்சேரி மாநில விளையாட்டு வளர்ச்சி ஆணைய நிர்வாக அதிகாரி கிருஷ்ணராஜ் பணி ஓய்வு பெற்றார். இவருக்கு, மாநில விளையாட்டு வீரர்கள் நலசங்கத்தின் சார்பில், பணி நிறைவு பாராட்டு விழா,மரப்பாலம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. விளையாட்டு வீரர்கள் நலசங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். பணி ஓய்வு பெற்ற அதிகாரி கிருஷ்ணராஜிக்கு சங்க தலைவர் வளவன், வாலிபால் சங்க செயலாளர் ரமணி பூபதி, ஒலிம்பிக் சங்க செயலாளர் தனசேகரன் நினைவு பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை