ஓய்வு பெற்றவர்களை பணி அமர்த்துவதற்கு கண்டனம்
புதுச்சேரி : மின்துறையில் ஓய்வு பெற்றவர்களை பணி அமர்த் துவதை கண்டித்து, புதுச்சேரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.மின்துறை தலைமை அலுவலகம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் கவுசிகன் தலை மை தாங்கினார். மத்திய குழு உறுப்பினர் ஆனந்த், செயலாளர் சஞ்சை சேகரன், பொருளாளர் ரஞ்சித் குமார் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'புதுச்சேரியில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் மின்துறை யில் ஓய்வு பெற்ற ஊழியர்களை பணி அமர்த்துவது, இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் செயல். இது கண்டனத்திற்குரியது. படித்து முடித்த தகுதியான இளைஞர்களை நிரந்தர பணியாளர்களாக பணி அமர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்துறை தனியார் மயம் என்ற முடிவை முழுதுமாக அரசு கைவிட வேண்டும்' என்றனர்.