மாணவியிடம் அத்துமீறல் சம்பவத்திற்கு கண்டனம்
புதுச்சேரி: மாணவியிடம் அத்துமீறல் சம்பவத்திற்கு அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.மாநில செயலாளர் விஜயா அறிக்கை:புதுச்சேரி தொழில்நுட்பபல்கலைக்கழக வளாகத்தில் மாணவியிடம் அத்துமீறல் சம்பவத்திற்கு பல்கலைகழக நிர்வாகமும்,அரசும் பொறுப்பேற்க வேண்டும். பல்கலைக் கழக வளாகத்திலேயே பாதுகாப்பு இல்லை.பெண்களின் அச்சமற்ற சுதந்திரத்தை பா.ஜ., என்.ஆர். காங்., கூட்டணி அரசு உறுதி செய்ய வேண்டும்.குற்றம் இழைத்ததாக சொல்லப்பட்டவர்கள் கைது செய்யப்படுவதுடன், அவர்களுக்கு ஜாமின் கிடைப்பதை அரசு கடுமையாக ஆட்சேபனை செய்ய வேண்டும். 11ம் தேதி நடந்த சம்பவத்திற்கு, பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் 14ம் தேதி போலீசில்பெயர் குறிப்பிடாத நபர்கள் மீது தெளிவற்ற புகார் அளித்தது சந்தேகத்தை எழுப்புகிறது.புதுச்சேரி கவர்னர் உடனடியாக பதிவாளரையும், பாதுகாப்பு பணியில் உள்ள கண்காணிப்பு அதிகாரியையும் தற்காலிக பணிநீக்கம் செய்து, பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்திட உயர்நீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.